Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

99 சதவிகித ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டது: ரிசர்வ் வங்கி தகவல்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குக்குப் பின்னர் 1.4 சதவிகிதம் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 


கள்ள நோட்டுகளை ஒழிப்பது, கறுப்புப் பணப் புழக்கத்தைக் குறைப்பது மற்றும் தீவிரவாதக் குழுக்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளைத் தடுக்க புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்தாண்டு நவம்பர் 8-ல் மத்திய அரசு அறிவித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, அரசின் இந்த நடவடிக்கையால் புழக்கத்தில் உள்ள 5 முதல் 7 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் வெளிவரும் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் மொத்தமுள்ள 632.6 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 8.9 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்ப வரவில்லை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இது 1.4 சதவிகிதம் என்றும் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 2016-17-ம் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நோட்டுகள் அச்சிடும் பணிக்கான செலவு, இருமடங்கானதாகவும் தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணிக்குக் கடந்த 2015-16 நிதியாண்டில் ரூ.3,421 கோடி செலவிடப்பட்டதாகவும், இது 2016-17 நிதியாண்டில் ரூ.7,965 கோடியாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2016-17 நிதியாண்டில் 7.62 லட்சம் எண்ணிக்கையிலான கள்ளநோட்டுகள் பிடிபட்டதாகவும், இது கடந்த 2015-16 நிதியாண்டில் 6.32 லட்சமாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஏறக்குறைய 99 சதவிகித ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. இந்நிலையில், கறுப்புப் பணம் எங்கே என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement