Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதாரைக் கட்டாயமாக்கும் காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்குவதற்கான காலக்கெடுவை மத்திய அரசு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்க திட்டமிட்டுள்ளது. 


அரசின் பல்வேறு வகையான நலத்திட்டங்களுக்கு ஆதாரை கட்டாயமாக்குவதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக நடந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், ஆதார் கட்டாயம் என்பதை அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஷ்யாம் திவன், தனிநபர் ரகசியம் காப்பது அடிப்படை உரிமை என்று 9 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பதை நினைவுபடுத்தினார். எனவே, ஆதார் தொடர்பான வழக்குகளையும் அதுபோன்ற அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார். அதேபோல், நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.  


அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் காலக்கெடு செப்டம்பர் 30-ம் தேதியிலிருந்து டிசம்பர் 31-ம் தேதிவரை நீடிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கினை அவசரமாக விசாரிக்கத் தேவையில்லை. அரசு வழக்கறிஞர் கூறியபடி காலக்கெடு டிசம்பர் வரை நீடிக்கப்பட இருப்பதால், இதுதொடர்பான வழக்குகளை நவம்பர் முதல் வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்தனர்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement