Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் - முதல் இடத்தில் பி.ஜே.பி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள்

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் பி.ஜே.பி எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் முதலிடத்தில் இருப்பதாக, ஏ.டி.ஆர் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கு எதிராக குற்ற வழக்கு


ஏ.டி.ஆர் (ADR) என்ற தொண்டு நிறுவனம், குற்ற வழக்குகளில் தொடர்புடைய எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் 51 பி.ஜே.பி எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன. இவற்றில் 48 பேர் எம்.எல்.ஏ-க்கள். மீதம் உள்ள மூன்று பேர் எம்.பி-க்கள். 


பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதற்காக இவர்கள் மீது குற்ற வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆய்வு செய்ததில் 1,581 பேரில் 33 சதவிகிதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதேபோல, சிவசேனா கட்சியின் 7 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள், திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.


மேலும், மக்களவை மற்றும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் 36 பேர் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 27 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் இருப்பதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement