டெல்லி எய்ம்ஸிலும் ராகிங் கொடுமை - 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

'பொறுப்பான கல்லூரி' என்று சொல்லப்படும் டெல்லி எய்ம்ஸில், ஜூனியர்களை ராகிங் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏழு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளங்கலை அறிவியலில் 'ஒளியியல் மற்றும் அணுக்கதிர் மருத்துவம்' எடுத்துப் படிப்பவர்கள்.  

எய்ம்ஸ்

முதலாம் ஆண்டில் புதிதாகச் சேர்ந்திருக்கும் சில மாணவர்களை சீனியர் மாணவர்களான இவர்கள் ராகிங் செய்துள்ளனர். அது இவர்களுக்கிடையே பகையை வளர்த்து, அடிதடியில் முடிந்துள்ளது. இதில், முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். அதைப் பார்த்த மற்றொரு மாணவர், எய்ம்ஸ் நிர்வாகத்திற்கும் அங்குள்ள புறக்காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காவல்துறை தலையிட்டாலும் மாணவர்களிடையே ஏற்பட்ட சமாதானத்தின் அடிப்படையிலும் வழக்கு எதுவும் பதியவில்லை. இருந்தாலும் ராகிங் காரணமாக மாணவர்கள் குழுவாகப் பிரிந்து தாக்கிக்கொண்டதை எய்ம்ஸ் நிர்வாகம் எளிதில் விடுவதாக இல்லை. எனவே, ராகிங் தடுப்புக் குழு ஒன்று அமைத்து விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில்,  ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்ததற்காக இந்தச் செயலில் ஈடுபட்ட ஏழு பி.எஸ்.சி மாணவர்களை மூன்று மாதங்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!