Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

மும்பையில், ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில், பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 

மும்பை கட்டட விபத்து


மும்பையில் உள்ள பிந்தி பஜார் பகுதியில், நேற்று காலை, 117 ஆண்டுகள் ஆன பழைய ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. ஏற்கெனவே வெள்ளத்தில் தத்தளித்து வரும் மும்பையில், இந்த விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில், ஒற்றை இலக்கத்திலிருந்த பலி எண்ணிக்கை, தற்போது உயர்ந்துகொண்டே போகிறது.


நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடந்தன. இதில், பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. 25 ஆண்களும் 9 பெண்களும் இந்தக் கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீயணைப்புத்துறையைச் சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஓர் அதிகாரியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.


விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை. ஆனால், தொடர்ந்து பெய்த பேய் மழை காரணமாகவே, கட்டடம் இடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தக் கட்டடத்தில், மொத்தம் 12 குடும்பங்கள் வசித்துவந்தனர். மும்பையில் கட்டடம் இடிந்து விழுவது வாடிக்கையாகிவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை நான்கு இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளன. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement