Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

திருப்பதியில் குடியரசுத் தலைவர் குடும்பத்துடன் சாமி தரிசனம்!

திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன் குடும்பத்துடன் வந்திருந்தார்.

ராம்நாத் கோவிந்த்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னதாகவே திருமலை வந்தார். இன்று காலை சாமி தரிசனம் செய்வதற்காக திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் குடும்பத்தாருடன் தங்கியிருந்தார். காலை 7 மணி அளவில் ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்துக்காக தன் மனைவி சவிதா, மகன் பிரசாந்த் குமார், மகள் ஸ்வாதி ஆகியோருடன் பத்மாவதி விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டார்.

திருமலை ஏழுமலையான் சுவாமியைத் தரிசனம் செய்யும் முன்னர் வராக சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஆந்திர மாநிலம் நரசிம்மன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் உடன் சென்றனர். வராக சுவாமி கோயில் தரிசனத்துக்குப் பின்னர், ஏழுமலையானை தரிசித்த குடியரசுத் தலைவர் திருப்பதியிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement