பரவுகிறது 'லாக்கீ' பணயத்தொகை வைரஸ் - மத்திய அரசு எச்சரிக்கை

மின்னஞ்சல்கள் மூலமாக லாக்கீ என்கிற பணயத்தொகை கேட்கும் வைரஸ் பரவிவருவதாக இந்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் அறிமுகமில்லாத மின்னஞ்சல்களை திறக்கவேண்டாம் என்றும் அவை தரவிறக்கச்சொல்லும் மென்பொருட்களையோ, எழுத்துருக்களையோ (Fonts) பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தொலை தொடர்பு துறை கூடுதல் செயலாளர் அஜய்குமார் டிவிட்டரில் "இந்திய கணிப்பொறி பாதுகாப்பு பொறுப்புக்குழு கொடுத்துள்ள எச்சரிக்கையின் படி மேற்படி வைரஸ் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே எச்சரிகையுடன் இருக்கவும்" எனத் தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் இரண்டு கோடி மின்னஞ்சல்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளதாகவும், அப்படி அனுப்படும் மின்னஞ்சல்களில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்களான  இமேஜ், டெக்ஸ்ட், ஃபைல் ஆகியவற்றின் பெயரில் இருக்கும் இணைப்பை திறந்தால் கணிணி ஹேக் செய்யப்பட்டுவிடும். அதன் பிறகு இணையப்பணம் அல்லது தொடர் சங்கிலி பணம் என்று அழைக்கபடும் பிட்காயின் மூலமாக பணயத்தொகை செலுத்திய பிறகே தகவல்களை மீட்க முடியும் என்று இந்திய அரசின் இணையப்பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அப்படி தாக்குதலுக்கு இலக்கான கணிணிகளிடம். 0.5 பிட்காயின்களை பணயத்தொகையாக கேட்கிறது. இது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய்கள் அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த 'வான க்ரை' என்கிற ஃபிஷிங் இமெயில் தாக்குல் மருத்துவமனைகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!