Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிர்மலா சீதாராமனுக்கு ப்ரோமோஷன்... மோடியின் புதிய அமைச்சரவை விவரங்கள்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

modi


குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்று வரும் மத்திய அமைச்சரவை விரிவாக்க விழாவில் மோடி, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் பங்கேற்றுள்ளனர்.

பதவியேற்ற அமைச்சர்களின் விவரங்கள்:

நான்கு அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்களாக அந்தஸ்து உயர்வு பெற்றுள்ளனர். பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான், வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் , மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர்  கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பி.ஷிவ் பிரதாப் சுக்லா, பீகாரை சேர்ந்த எம்.பி.அஷ்வினி குமார் , மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த எம்.பி. வீரேந்திர குமார், கர்நாடகாவை சேர்ந்த அனந்த்குமார் ஹெக்டே பீகாரை சேர்ந்த ராஜ்குமார் சிங், முன்னாள் ஐஎஃப்எஸ் அதிகாரி ஹர்தீப் சிங் பூரி  ஆகியோர் மத்திய இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கஜேந்திரசிங் ஷெகாவத், ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்போன்ஸ் கண்ணந்தனம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி சத்யபால் சிங் ஆகியோர் அமைச்சரவை குழுவுக்கு (council of ministers) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் விரைவில் அறிவிக்கப்படும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement