Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடியை வரவேற்ற சீன அதிபர்: இன்று தொடங்குகிறது 'பிரிக்ஸ்' உச்சி மாநாடு!

இன்று தொடங்கும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற பிரதமர் மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்றார். 

பிரிக்ஸ்

இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளை உள்ளடக்கியது பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு. உலகின் மொத்த மக்கள் தொகையில் 40% அதிகமானோர் இந்த பிரிக்ஸ் நாடுகளில் வந்து விடுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து உலக பொருளாதார் நிலை முதல் தீவிரவாதம் வரை பேசுவார்கள். 

இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு சீனாவில் உள்ள சியாமென் நகரில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இந்திய - சீன எல்லையில் பதற்றம் விலகி இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு, முதல் முறையாக இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்துக் கொள்கின்றனர்.

இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் மிகேல் தெமேர் ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். மாநாட்டின் நடுவில் மோடி, ரஷ்ய மற்றும் பிரேசில் அதிபர்களிடம் இருநாட்டு உறவு குறித்து பேசுவார் எனத் தெரிகிறது. சீன அதிபருடன் பேச்சுவார்த்தை இருக்குமா என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் வெளியாகவில்லை. 

இந்நிலையில், இன்று காலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த மற்ற நாட்டு தலைவர்களை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்றார். இந்திய பிரதமர் மோடியையும் அவர் வரவேற்றார். இரு நாடுகள் இடையே போர் உருவாகும் சூழல் இருந்துவந்த நிலையில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்துள்ளது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement