Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தினகரனை எச்சரித்த உச்ச நீதிமன்றம்!

ஃபெரா வழக்கை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்குக் கடும் எச்சரிக்கை செய்துள்ளது. 

டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது அமலாக்கத்துறை அந்நிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தது. தினகரன் மீது தொடரப்பட்ட அந்நிய செலாவணி மோசடி வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்திருந்தார் தினகரன்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தினகரனின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், "இது போன்ற வழக்கு தொடர்ந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்" என்று கடுமையாக எச்சரித்தது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement