Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்ணை பிச்சை எடுக்க உத்தரவிட்ட ஊர் பஞ்சாயத்து..! நடவடிக்கை எடுக்காத காவல்துறை

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், கன்றுக்குட்டி ஒன்று இறந்ததற்காக, 60 வயது பெண் ஒருவரை ஒருவாரம் பிச்சை எடுக்கச்சொல்லி பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது. 

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மடாடின் கிராமத்தைச் சேர்ந்தவர், கமலேஷ். அவர், ஆகஸ்ட் 31-ம் தேதி, தாயிடமிருந்த கன்றுக்குட்டியைப் பிரித்து, தனியாகக் கட்டுவதற்காக கன்றுக்குட்டியை இழுத்துள்ளார். அப்போது, அந்தக் கன்றுக்குட்டியின் கழுத்தில் கயிறு மாட்டியிருந்துள்ளது. அதனால் கயிறு இறுகி, அந்தக் கன்றுக்குட்டி பலியானது. இந்த விவகாரம் ஊர் பஞ்சாயத்துக்குச் சென்றுள்ளது. அந்தப் பஞ்சாயத்தில், ஏழு நாள்களுக்கு அந்தப் பெண் ஊருக்குள் வரக்கூடாது என்றும், ஏழு நாள்களுக்கு அருகில் உள்ள கிராமங்களில் பிச்சை எடுக்க வேண்டும் என்றும், அந்த ரூபாயைக்கொண்டு கங்கையில் மூழ்கி எழுந்திருக்க வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த விவகாரம்குறித்து தெரிவித்துள்ள அவரது மகன் அருண் ஶ்ரீவாஸ்,'பஞ்சாயத்தின் இந்த உத்தரவுக்கு, பயத்தின் காரணமாக யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. எனது அம்மா, அருகிலுள்ள உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளார். தினமும் அவர் பிச்சை எடுக்கிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவித்தார். 'இந்த விவகாரம்குறித்து புகார் ஏதும் வராததால், நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை'  என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement