Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பினராயி விஜயனைத் தொடர்ந்து மம்தா அதிரடி: மோகன் பகவத்துக்குத் தடை!

கேரளாவைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்திலும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு தடை விதிக்கப்பட்டுவருகிறது.

மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், சில நாள்களுக்கு முன்னர் கேரளாவில் உள்ள ஒரு பள்ளிக்குக் கொடியேற்ற வருவதாக அறிவிப்பு வெளியானது. அரசு விதிமுறைகளின்படி, அரசியல் கட்சிகளைச் சேர்ந்த யாரும் கொடியேற்றக்கூடாது என்பதால், கேரளாவின் மாவட்ட ஆட்சியர் ஒருவர், மோகன் பகவத் கொடியேற்றுவதற்குத் தடை விதித்தார். அதையும் மீறி, மோகன் பகவத் அந்தப் பள்ளியில் கொடியேற்றிய சம்பவம், அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர், வரும் அக்டோபர் மாதம், கொல்கத்தாவில் ஒரு பொதுமேடையில் பேசவிருப்பதாகத் திட்டம் வெளியிடப்பட்டது. இந்நிலையில், கொல்கத்தாவில் மோகன் பகவத் பேசவிருந்த அரசுக்குச் சொந்தமான கலையரங்கம், மோகன் பகவத் நிகழ்ச்சியை ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது. இதேபோல, கடந்த ஜனவரி மாதம் மோகன் பகவத் பங்குபெற இருந்த பேரணியும் அரசால் ரத்துசெய்யப்பட்டது. கடந்த மாதமும் இதே பேரணியை மம்தா அரசு தடை விதித்தது. கேரளாவைத் தொடர்ந்து தற்போது மேற்கு வங்கத்திலும் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பும், தடையும் எழத் தொடங்கியுள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement