Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கௌரி லங்கேஷை சுட்டுக்கொன்றதற்கு பினராயி விஜயன் கண்டனம்..!

'மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கடும் கண்டனத்துக்குரியது' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

 
தீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர்ப் பகுதியில் வசித்துவந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். 'லங்கேஷ் பத்திரிகே' என்ற கன்னடப் பத்திரிகையை நடத்திவரும் கௌரி லங்கேஷ், ஆங்கிலம் மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக எழுதிவந்தவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ராஜேஷ்வரி நகரிலுள்ள கௌரி லங்கேஷ் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்  4 பேர், அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. கடும் கண்டனத்துக்குரியது. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement