வாட்ஸ்அப் பிரைவசி வழக்கு - உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

ரவுகள் பாதுகாப்புக்காக (Data Protection) ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


வாட்ஸ்அப் நிறுவனம் பயனாளர் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்வதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ’தரவுகள் பாதுகாப்புக்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் கமிட்டி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அதுதொடர்பாகச் சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் பயனாளர் தரவுகளை 3-ம் நபருக்குப் பகிரப்படவில்லை என்பதை உறுதி செய்யவும், இதுகுறித்து 4 வார காலத்துக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தொலைபேசி எண், லாஸ்ட் சீன் எனப்படும் கடைசியாகப் பயன்பாட்டில் இருந்த நேரம் உள்ளிட்ட தகவல்களை மட்டுமே பகிர்ந்து வருவதாகக் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!