Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூஜைக்குப் பின்னர் பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன்!

நாட்டின் இரண்டாவது பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராக, நிர்மலா சீதாராமன் இன்று டெல்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

nirmala
 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மூன்றாவது முறையாக  மாற்றியமைக்கப்பட்டது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 

அமைச்சராக இருந்த அனில் தவே மரணம் அடைந்துவிட்டார். மனோகர் பாரிக்கர், கோவாவின் முதல்வரானதாலும்,  வெங்கைய நாயுடு துணைக் குடியரசுத் தலைவரானதாலும் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களிடம் இருந்த துறைகளை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரிடம் கூடுதலாக  ஒப்படைக்கப்பட்டது.

poojai
 

இந்நிலையில்,  பிரதமர் மோடி அமைச்சரவையை மாற்றியமைத்து துறைகளை பகிர்ந்தளித்துள்ளார். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவர், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சராக, அருண் ஜெட்லி முன்னிலையில் டெல்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். பூஜை நடத்திய பின்னர், பாதுகாப்புத்துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement