Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு!

பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர்  துப்பாக்கியால் சுட்டனர்.


புகழ்பெற்ற இந்தி செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் எடுத்துவந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந்தன. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பங்கஜ் மிஸ்ரா பாட்னா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்தச் சம்பவம் நடந்துள்ளது.   
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close