Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கர்நாடகத்தில் பத்திரிகையாளர்கள் 25 பேருக்கு போலீஸ் பாதுகாப்பு..!

கர்நாடகாவில் முற்போக்கு எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் 25 பேருக்கு அம்மாநில அரசு போலிஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. 


கர்நாடக மாநிலத்தின் மூத்த பத்திரிக்கையாளரும் தீவிர இந்துத்துவ எதிர்பாளருமான கௌரி லங்கேஷ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்துத்துவ அமைப்புகளுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்தநிலையில் கர்நாடக அரசு, அம்மாநிலத்தைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் 25 பேருக்கு போலிஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. அதில் நடிகரும் எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட், பரகுர் ராமச்சந்திரப்பா, யோகேஷ் மாஸ்டர் உள்பட 25 பேருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை அறிவுறுத்தலைத் தொடர்ந்து கர்நாடக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement