Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி பிறந்தநாளுக்காக ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளி! - சர்ச்சையில் சிக்கிய உ.பி. அரசு

பிரதமர் மோடியின் பிறந்த நாளுக்காக ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளியைத் திறக்க உத்தரவிட்டதாக உத்தரப்பிரதேச அரசு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. 

பிரதமர் மோடி, தனது பிறந்தநாளை செப்டம்பர் 17-ம் தேதி கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், அன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள 1.60 லட்சம் தொடக்கப் பள்ளிகளும் செயல்படும் என்று மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு ஆட்சியில் இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய மாநிலத்தின் அடிப்படைக் கல்வித் துறையை அமைச்சர் அனுபமா ஜெய்ஸ்வால், ’பிரதமர் மோடியின் பிறந்த நாளில் தூய்மை இந்தியா திட்டம் உள்ளிட்ட அவரது கனவுத் திட்டங்கள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த இருக்கிறோம். அதற்காக, குறிப்பிட்ட பள்ளிகளைத் தத்தெடுத்துள்ள எம்.எல்.ஏக்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று அங்கு நடைபெறும் விழாக்களில் கலந்துகொள்ள இருக்கின்றனர். பிரதமர் மோடியின் கனவான தூய்மையான இந்தியா என்ற இலக்கினை குழந்தைகளிடம் விழிப்புஉணர்வு ஏற்படுத்தினால்தான் நாம் அடைய முடியும். அவரது பிறந்தநாளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.  

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையிலும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது குறித்து பல்வேறுதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, பிரதமர் மோடியின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதியில் பள்ளிகள் செயல்படுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உத்தரப்பிரதேச அரசு விளக்கமளித்துள்ளது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close