Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லி: மனித மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராடிவரும் தமிழக விவசாயிகள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் மனித மலம் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக விவசாயிகள்


பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது முறையாகப் போராடிவரும் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே மண்டை ஓடுகளை வைத்து போராடியது, சிறுநீர் குடித்து போராடியது, அரை நிர்வாணப் போராட்டம் உள்ளிட்ட நூதனப் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் போராட்டம் தற்போதுவரை மத்திய, மாநில அரசுகளின் காதுகளில் எட்டியது இல்லை. அதனால், இன்று யாரும் எதிர்பாராதவிதமாக மனித மலத்தை உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பெண்கள் உள்பட ஏராளமான தமிழக விவசாயிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழக விவசாயிகளின் இந்தப் போராட்டத்தை நேரில் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு வாந்தி, மயக்கம் போன்ற ஒவ்வாமை ஏற்பட்டது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close