Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இரண்டு தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

kashmir


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாதிகள் அடிக்கடி ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த சில நாள்களுக்கு முன்பு, மாநிலத்தின் பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினரால் தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீவிரவாதிகள் தங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து, இந்தக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், குல்காம் மாவட்டத்தில் இன்று, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, அங்கு தீவிரவாதிகள் இருப்பது தெரியவந்தது. அதனால், பாதுகாப்புப் படையினர் அதிரடியாகக் களத்தில் இறங்கினர். அப்போது நடந்த தாக்குதலில், இஸ்புல் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement