Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தகுதிநீக்கம் செய்யும் விவகாரம் - பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

தகுதிநீக்கம் செய்யப்படக் கோரி தொடரப்பட்ட வழக்கில் விளக்கமளிக்குமாறு பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் எம்.எல்.ஷர்மா என்பவர் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களைப் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவைப் பின்பற்றாமல் தன்மீதான கிரிமினல் வழக்கை மறைத்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் நிதிஷ்குமார் தேர்தலில் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்து வந்துள்ளார். எனவே, அவரைச் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையம் மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த 1991-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் தலைவர் சீதாராம் சிங்கை கொலை செய்தது மற்றும் நான்கு பேர் தாக்குதல் நடத்தியதாக தற்போதைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது கிரிமினல் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகவும் எம்.எல்.ஷர்மா தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close