ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கார் ஓட்டிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி!

சாம் மாநிலம் கௌகாத்தி நகரில் செப்டம்பர் 5-ம் தேதி வடகிழக்கு சுதேசிய மக்கள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்க 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சென்றிருந்தார். கௌகாத்தி விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஏராளமானோர் கூடியிருந்தனர். அஸ்ஸாம் மாநில உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, அஜீத் சிங்கும் அதில்  ஒருவர். விமான நிலையத்தைவிட்டு ரவிசங்கர் வெளியே வந்ததும் அவரை வரவேற்ற நீதிபதி அஜீத் சிங், காரில் அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல். அவருக்கு டிரைவராக அமர்ந்து காரையும் ஓட்டிச் சென்றார். 

சாமியாருக்கு கார் ஓட்டும் நீதிபதி

சாமியார் ரவி சங்கருக்கு நீதிபதியே கார் ஓட்டிச் சென்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்வேறு மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ரவிசங்கருக்கு, நீதிபதியே கார் ஓட்டுவது போன்ற புகைப்படங்களும் இணையங்களிலும் பரவி வருகிறது.

அஸ்ஸாம் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் நீதிபதியின் செயலை விமர்சித்துள்ளது. நீதிபதி அஜீத் சிங் விதிமுறைகளை மீறி செயல்பட்டுள்ளதாக கௌகாத்தி பார் கவுன்சில் குற்றம்சாட்டியுள்ளது. பொதுக்குழுக் கூட்டி இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 

 நீதிபதி அஜீத் சிங்கின் செயல்குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்குப் புகார் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!