வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/09/2017)

கடைசி தொடர்பு:19:30 (11/09/2017)

ஓய்வூதியத் திட்டத்துக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு..!

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 60 வயதிலிருந்து 65 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள ஓய்வூதியத் திட்டத்தின் ஒப்பந்ததாரர் குழு, 'தேசிய ஓய்வூதியத் திட்டம் தற்போது 18 வயது 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு மட்டும் செயல்பட்டுவருகிறது. அதனுடைய அதிகபட்ச வயது வரம்பை 60 வயதிலிருந்து 65 வயதாக மாற்றுவதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. எங்களுடைய ஆணையத்தின் முடிவுக்கு ஓய்வூதிய ஒழுங்குபடுத்தும் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதற்கான அதிகபட்ச வயது வரம்பை 70 வயது வரைக்கும் உயர்த்தும் திட்டமும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருப்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய நோக்கம் ஓய்வூதியத் திட்டத்தில் இல்லாதவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதுதான். 15 சதவிகித ஊழியர்கள் மட்டுமே ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். மீதமுள்ள 85 சதவிகிதம் பேர் முறைசாரா தொழில் செய்துவருகின்றனர். அவர்களையும் ஓய்வூதியத் திட்டத்தில் இணைப்பதுதான் எங்களுடைய நோக்கம்' என்று தெரிவித்துள்ளது.