Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டெல்லியில் ஆங்கிலத்தில் பேசியவருக்கு தர்ம அடி: மூன்று பேர் கைது!

டெல்லியில், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடிய ஒருவரை அடித்த மூன்று பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது

நொய்டாவைச் சேர்ந்தவர் வருண் குலதி. இவர், தனது நண்பர் ஒருவரை டிராப் செய்வதற்காக டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். அப்போது, தனது நண்பருடன் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடிய வருணை, ஐந்து பேர் கொண்ட கும்பல் சுற்றி வளைத்துள்ளனர். அவர்கள் வருணைப் பார்த்து, "எதற்காக ஆங்கிலத்தில் உரையாடுகிறாய்" என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் வருணைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அவர்கள் ஐந்து பேரும் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம், கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. இதையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட மற்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close