கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்! | Tamilnadu police arrived to resort in Karnataka, where Dinakaran faction MLA's are staying

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (12/09/2017)

கடைசி தொடர்பு:15:30 (12/09/2017)

கர்நாடகா விடுதியில் குவிந்த தமிழக போலீஸார்!

கர்நாடகா, குடகு பகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருக்கும் விடுதியில் தமிழக போலீஸார் சென்றுள்ளனர். கோவை பதிவு எண் கொண்ட தமிழக காவல்துறை வண்டிகள் விடுதிக்குச் சென்றுள்ளன. ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பு போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் எம்.எல்.ஏ-க்கள் விடுதியில் தமிழக போலீஸ் குவிந்துள்ளது. 

தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக தினகரன் தரப்பும் எதிர்க்கட்சியினரும் போர்க்கொடி தூக்கிவரும் சூழ்நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க-வின் தற்காலிகப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் ரத்து செய்யப்படுவதாக அதிரடியாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தினகரன் வெளியிட்ட அறிவிப்புகள், நியமனங்கள் செல்லாது எனவும், ஜெயலலிதா நியமித்த உறுப்பினர்கள், கட்சிப் பொறுப்புகளில் நீடிப்பார்கள் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இன்று கர்நாடகா, குடகில் உள்ள தனியார் விடுதிக்குள் தமிழக போலீஸார் சென்றுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.