மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு! | Cabinet approves release of additional 1% Dearness Allowance to Central Government employees

வெளியிடப்பட்ட நேரம்: 17:51 (12/09/2017)

கடைசி தொடர்பு:17:51 (12/09/2017)

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒரு சதவிகிதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பின்னர் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஒரு சதவிகிதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் அடிப்படை ஊதியத்திலிருந்து ஏற்கெனவே வழங்கப்படும் 4 சதவிகித அகவிலைப்படியுடன் ஒரு சதவிகிதம் கூடுதலாக வழங்கப்படும். 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இது வழங்கப்படுவதாகவும் அரசு கூறியுள்ளது. உயர்ந்து வரும் விலைவாசியை ஈடுகட்டும் விதமாக ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தியிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இதன்மூலம், 49.26 லட்சம் அரசு ஊழியர்களும், 61.17 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல், தனியார் துறை ஊழியர்களுக்கான பணிக்கொடை திருத்தத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.