Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரோகிங்யா அகதிகளுக்கு நீதி கேட்டு டெல்லி மியான்மர் தூதரகம் முற்றுகை!

ரோகிங்யா இன மக்களுக்கு நீதி வழங்க கோரி மியான்மர் தூதரகத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

மியான்மர் தூதரகம் முற்றுகை

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில், பௌத்தர்களுக்கும் ரோகிஞ்சா இஸ்லாமிய மக்களுக்கும் இடையே, இனமோதல் அதிகரித்துள்ளது. பெரும்பான்மை புத்த மதத்தினரைக் கொண்ட மியான்மரில், 5 சதவிகித முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மியான்மரில் புத்தமதத்தினரால் ரோகிங்யா இனத்தவர் குறிவைத்துப் படுகொலை, பலாத்காரக் கொலைகள் செய்யப்பட்டதை அடுத்து, ரோகிங்யா மக்கள் அதிகளவில் அகதிகளாகப் புலம் பெயர்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவிலும் அடைக்கலம் இல்லாமல் போகலாம் என்ற சூழல் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏற்கெனவே இந்தியாவில் வசித்து வந்தவர்களை இந்திய-மியான்மர் எல்லையில் திருப்பியனுப்ப வேண்டும் என்றாலோ மியான்மர் அரசு இந்த அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டுக்குள் திரும்ப ஏற்றுக்கொள்ள மறுத்தாலோ இவர்களுக்காக புதிதாக அகதிகள் தடுப்பு மையங்களை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், அகதிகளாக தவித்து வரும் அம்மக்களுக்கு நீதி வேண்டுமென டெல்லியில் பொதுமக்கள் பலர் மியான்மர் நாட்டு தூதரகரத்தை தற்போது முற்றுகையிட்டுள்ளனர். ரோகிங்யா மக்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமென மனித உரிமைகள் ஆணையமும் தலையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close