வெளியிடப்பட்ட நேரம்: 00:50 (14/09/2017)

கடைசி தொடர்பு:08:41 (14/09/2017)

சோனியா காந்தியைச் சந்தித்து வாழ்த்து பெற்ற டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள்..!

டெல்லி பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கான தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 


இரு தினங்களுக்கு முன்னர் நடந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் ஒட்டுமொத்த இடங்களையும் இடதுசாரிகள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கைப்பற்றினர். இன்று டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் போட்டியில் வெற்றி பெற்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கு மட்டும் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர் வெற்றி பெற்றுள்ளார்.

2012-ம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் மாணவர் அமைப்புத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். பொதுச்செயலாளர் பதவிக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்தான் வெற்றிபெற்றுள்ளார். ஆனால், ஏ.பி.வி.பியைச் சேர்ந்தவர் பெயர் மோசடி செய்து அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் மாணவர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.