Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புல்லட் ரயில் அடிக்கல் : நமஸ்காரத்துடன் பேசத் தொடங்கிய ஜப்பான் பிரதமர்

அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் பிரதமர் மோடி சற்றுமுன் அடிக்கல் நாட்டினார். 

bullettrain
 

இது, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம். 1,10,000 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இந்தத் திட்டத்துக்கு, ஜப்பான் கடனுதவி செய்கிறது. 81 சதவிகிதத் தொகையை ஜப்பான் வழங்க உள்ளது. இந்த அதிவேக புல்லட் ரயில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும். இந்த அதிவேக புல்லட் ரயில், குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை (508 கி.மீ) சுமார் 2 மணி,  7 நிமிட நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது. 

japan bullet train
 

புல்லட் ரயில் திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ‘நமஸ்கார்’ என்று கூறி, தன் உரையைத் தொடங்கினார். ’'நண்பர் பிரதமர் மோடி, ஒரு தொலைநோக்குத் தலைவர். அவர், புதிய இந்தியாவை உருவாக்கிவருகிறார். அதில், ஜப்பானையும் கூட்டாளியாகச் சேர்த்துள்ளார். புதிய இந்தியா உருவாவதை நாங்கள் ஆதரிக்கிறோம். மோடியும் நானும் இணைந்து 'ஜெய் ஜப்பான்- ஜெய் இந்தியா' கனவை நினைவாக்குவோம்’ என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி ‘ஒரு நாட்டின் வளர்ச்சிக்குப் போக்குவரத்து மிக முக்கியம். 1964ல் புல்லட் ரயில் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜப்பானின் வளர்ச்சி அதிவேகமானது. சர்வதேச அரங்கில் பிற நாடுகளுடன் போட்டி போட புல்லட் ரயில் போன்ற நவீன வசதிகள் தேவை’ என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement