வெளியிடப்பட்ட நேரம்: 17:59 (14/09/2017)

கடைசி தொடர்பு:18:35 (14/09/2017)

“அரசியல் கொள்கைகளை வளர்க்க உருவாக்கப்பட்டதல்ல பள்ளிகள்!” #VikatanSurveyResults

பள்ளிகள்

மத்தியப் பிரதேச அரசுப் பள்ளிகளில் வருகைப்பதிவின்போது... இனி 'யெஸ் சார்', 'யெஸ் மேடம்' என்று சொல்வதற்குப் பதிலாக 'ஜெய்ஹிந்த்' என்று சொல்ல வேண்டும் என அந்த மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் விஜய் ஷா உத்தரவிட்டுள்ளார். இது, அடுத்தகட்டமாகத் தனியார் பள்ளிகளிலும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த உத்தரவு ஆசிரியர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தின்போது தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு பற்றிய மக்கள் கருத்தைத் தெரிந்துகொள்வதற்கு, 'தேசப் பக்தியை மக்களிடையே இப்படித்தான் கொண்டுசெல்ல வேண்டுமா?' என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் சர்வே நடத்தப்பட்டது. இதற்கு பெரும்பாலானோர் அளித்த பதில், "மக்களுக்கும், மாணவர்களுக்கும் தேசப் பக்தியை இந்த வழியில் வளர்ப்பது சரியான வழியல்ல. பி.ஜே.பி அரசின் கொள்கைகளுக்கு ஏற்றவாறு எல்லாத் திட்டங்களையும், விதிமுறைகளையும் அமைத்து வருகின்றன மாநில அரசுகள். அதுமட்டுமல்லாமல், மாணவர்களுக்கு தேசப் பக்தியை வேறு வழியில் வளர்க்கலாம். அதை, காலை வருகைப் பதிவின்போது வளர்க்க வேண்டியதில் எந்த அவசியமும் இல்லை. சினிமா தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்களையும் தேசிய கீதம் ஒலிக்கும்போது எழுந்து மரியாதை செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முன்பு உத்தரவிட்டிருந்தது. பொழுதுபோக்குக்காகத் தியேட்டருக்கு வந்தால், அங்கும் தேசப்பற்று என மக்களைக் கட்டாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோல், எல்லா இடங்களிலும் மக்களை அரசு தனக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டிருக்கிறது" என்பது மக்களின் கருத்தாக இருக்கிறது. 

இன்னும் சிலர், "எங்கும் நாம் தேசிய கீதத்தையும், தேசப்பற்றையும் வெளிப்படுத்துவது இல்லை. இப்படியாவது செய்வது சிறப்பான ஒன்றுதானே. இதில் என்ன தவறு இருக்கிறது" என்று பதிலளித்துள்ளனர். இரு வேறு கருத்துகள் இருந்தபோதும், அரசு அறிவித்துள்ள உத்தரவுக்கு எதிர்ப்பு அதிகமாகத்தான் உள்ளது. மேலும், சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும் கீழே...

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

சர்வே முடிவுகள்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்