Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கருணாநிதிக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை நீக்க முடிவு!

தி.மு.க தலைவர் உள்ளிட்ட சில தேசியத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை நீக்க, மத்திய அமைச்சகம் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி

பாதுகாப்பு மேம்பாட்டுக் குழு, இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களான தி.மு.க தலைவர் கருணாநிதி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட்’ பிரிவு பாதுக்காப்பை நீக்குமாறு, மத்திய அமைச்சகத்துக்குப் பரிந்துரைசெய்துள்ளது. 

இந்தப் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசீலித்து இறுதி முடிவை அறிவிப்பார். தற்போதைய சூழலில், இந்த முக்கிய அரசியல் தலைவர்களுக்கான ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு ராஜ்நாத் சிங், அத்வானி உள்ளிட்ட 15 தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 40 பாதுகாவலர்கள் மற்றும் இரண்டு கூடுதல் பாதுகாப்பு வாகனங்கள் வழங்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருப்போருக்கான வசதிகள் பரிசீலிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close