Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரயில் பயணங்களில் படுக்கை வசதியைப் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு!

ரயில் பயணங்களின் போது பயணிகள் படுக்கை வசதியைப் பயன்படுத்தும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்து ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் பயணங்களின் போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே பயணிகள் படுக்கை வசதியைப் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் பயணிகள் இருக்கை வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியிலிருந்து சிலருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் தூங்க விரும்பினால், அவர்களுக்கு ஒத்துழைக்குமாறு பயணிகளைக் கேட்டுக்கொள்வதாகவும் ரயில்வே வாரியம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய ரயில்வேத் துறை செய்தித் தொடர்பாளர் அனில் சக்ஸேனா, ‘படுக்கை வசதியைப் பயன்படுத்துவது தொடர்பாக ரயில் பயணிகளிடேயே பிரச்னை எழுந்து வருவதாக அதிகாரிகளிடமிருந்து புகார்கள் வந்ததால், இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சுற்றறிக்கைக்கு முன்பாக ரயிலில் படுக்கை வசதியைப் பயன்படுத்தும் நேரம் இரவும் 9 மணியிலிருந்து காலை 6 மணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close