Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தொடங்கியது விமானப்படை முன்னாள் தளபதியின் இறுதி ஊர்வலம்!

மறைந்த இந்திய விமானப்படையின் முன்னாள் தளபதி அர்ஜன் சிங்கின் இறுதி ஊர்வலம், தற்போது தொடங்கியுள்ளது.

விமானப்படைத் தளப்தி இறுதி ஊர்வலம்

1965-ம் ஆண்டு அது. இந்தியா மீது பாகிஸ்தான் போர் தொடுத்தது. அக்னூர் பகுதிமீது கடுமையான தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான். அப்போது, 44 வயதான அர்ஜன் சிங், ஒரு இளம் விமானப்படைப் பிரிவுக்கு தலைமைதாங்கிச்சென்று போரிட்டார். அவரது துணிச்சலான வீரத்தால் எதிரிகள் வீழ்ந்தனர். இந்திய விமானப்படை வெற்றிப்பாதையில் பயணித்தது. குறிப்பாக, அந்தப் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அர்ஜன் சிங். விமானப்படையில் 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஒரே அதிகாரி அர்ஜன் சிங்தான்.

கடந்த 16-ம் தேதி, காலை அர்ஜன் சிங்குக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்று இரவு காலமானார். அவருக்கு வயது 98. அர்ஜன் சிங் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, அர்ஜன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லி பிரார் சதுக்கத்தில் தற்போது நடைபெற்றுவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement