Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசியப் புலனாய்வு முகமை இயக்குநராக ஒய்.சி.மோடி நியமனம்!

தேசியப் புலனாய்வு முகமையின் புதிய இயக்குநராக ஒய்.சி. மோடி நியமிக்கப்பட்டுள்ளார். 

ஒய்.சி.மோடி


தேசியப் புலனாய்வு முகமையின் (என்.ஐ.ஏ) இயக்குநராக சரத்குமார் கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அவரது பதவி இரண்டு முறை நீட்டிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வருகின்ற அக்டோபர் 30-ம் தேதியுடன் சரத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நிலையில், தேசியப் புலனாய்பு அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒய்.சி மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒய்.சி.மோடியை நியமிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த சில மாதங்களுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், அந்தப் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. வருகின்ற 2021-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை ஒய்.சி.மோடி அந்தப் பதவியில் இருப்பார்.

இவர் 1984-பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை, விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவில் ஒய்.சி மோடி இடம் பெற்றிருந்தார். மோடி தற்போது, சி.பி.ஐ-யின் சிறப்பு இயக்குநராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement