Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘பெட்ரோல், டீசல் விலை குறையும்’ - மத்திய அமைச்சர் நம்பிக்கை

‘தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை குறையும்' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


பெட்ரோலியப் பொருள்களின் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்த பிறகு, பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய பிரதான், பெட்ரோல், புயல் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி 13 சதவிகிதம் அளவுக்குக் குறைந்ததுதான், டீசல் விலையேற்றத்துக்குக் காரணம்.

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோலிய நிறுவனங்கள் அரசால் நடத்தப்படுகின்றன. அதனால், பெட்ரோலிய நிறுவனங்கள் அதிக லாபத்துக்காக விலை நிர்ணயம் செய்யப்படுவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி வரி விதிப்பின் கீழ் கொண்டுவருவது பற்றி ஆலோசித்துவருகிறோம்’ என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement