Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற முடியாது’: விமர்சிக்கும் ப.சிதம்பரம்!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பதைk கடுமையாக விமர்சித்துள்ளார், நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால் நேற்று தகுதிநீக்கம் செய்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளது, தினகரன் தரப்பு. இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல, நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனைக் கூட்டமும் நடக்கிறது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று தமிழகம் வருகிறார். இதனிடையே, எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 18 தொகுதிகளும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு, பேரவைச் செயலாளர் பூபதி கடிதம் அனுப்பினார். இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியாக இருப்பதாக வெளியான அறிவிப்புகுறித்து அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் ப.சிதம்பரம் எம்.பி. அவர், “எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்திருப்பது, முற்றிலும் மைனாரிட்டி தமிழக அரசைக் காப்பாற்றுவதற்காகத்தான். மூழ்கும் கப்பலை யாராலும் காப்பாற்றவே முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement