Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடிசெய்தது உச்ச நீதிமன்றம்!

தமிழகத்தில் பின்பற்றப்படும், 69 சதவிகித இடஒதுக்கீடு முறை சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடிசெய்வதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 69 சதவிகித இடஒதுக்கீடு முறையை பின்பற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருநெல்வேலியைச் சேர்ந்த திருமாமகள் என்ற மாணவியின் சார்பில் அவரது தந்தை கோவிந்தராஜ், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த 69 சதவிகித இடஒதுக்கீடு முறையால், தன் மகளைப் போல பலருக்கும் மருத்துவக் கல்வி சேர்க்கை கேள்விக்குறியாகி உள்ளதாக வழக்குத் தொடர்பான மனுவில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி, கோவிந்தராஜின் மனுவைத் தள்ளுபடிசெய்வதாக அறிவித்தார். மேலும், மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு, இனிமேலும் கால அவகாசம் தர முடியாது என்றும் கால தாமதமாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்குகுறித்து விசாரிக்க முடியாது என்றும்,  அதனால் இவ்வழக்கைத் தள்ளுபடிசெய்வதாக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement