Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்.கே.அத்வானி, தம்பிதுரைக்கு புதிய பதவி!

நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார், பா.ஜ.க-வின் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி.

அத்வானி

பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர் அத்வானியை நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறைக் குழுத் தலைவராக நியமிப்பதாக, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், நாடாளுமன்ற நெறிமுறைக் குழுவில் இடம்பெற வேண்டிய உறுப்பினர்கள் 14 பேரும், சபாநாயகர் சுமித்ரா மகாஜனால் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்தத் தலைவர் அத்வானி தலைமையிலான இக்குழு, நெறிமுறைக்குப் புறம்பாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும், அவர்கள் மீது சுமத்தப்படும் புகார்கள் குறித்தும் விசாரித்து, சபாநாயகருக்கு அறிக்கையும் சிபாரிசும் செய்யும்.

இந்தக் குழு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைத் தானாக முன்வந்து விசாரித்தும் அறிக்கைகள் சமர்ப்பிக்கும். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவுக்கு, நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக, தம்பிதுரை எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தையும், ஆராயும் குழுத் தலைவராக சபாநாயகரால் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement