Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரிவாளுடன் விரட்டிய தெருவோரப் பெண் வியாபாரி; அலறி ஓடிய அதிகாரி!

Chennai: 

மும்பையில் தெருவோரக் கடையில் இருந்த பொருள்களைத் தூக்கிச் சென்ற அதிகாரியை அரிவாளுடன் பெண் விரட்டிச் செல்ல அவர் தப்பி ஓடினார்.

அரிவாளுடன் பிரமிளா

விரார் பகுதியில் தெருவோரத்தில் பிரமிளா என்பவர் ஜூஸ் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். ஆயுதபூஜை வருவதை முன்னிட்டு வசாய் - விரார் மாநகராட்சி அதிகாரி பிரபாகர் போயர் தலைமையில் இன்று காலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது.

பிரமிளாவின் கடையில் இருந்த ஐஸ்பெட்டி, பழங்கள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பிரமிளா, 'தான் அபராதம் கட்டத் தயாராக இருப்பதாகவும் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றும்' அவர்களிடத்தில் கெஞ்சியுள்ளார். பிரமிளாவின் வேண்டுகோளை அதிகாரிகள் ஏற்காமல் கடையில் இருந்த பொருள்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினர். 

இதனால் ஆத்திரமடைந்த  பிரமிளா தன் ஸ்கூட்டியில் அதிகாரிகள் சென்ற வாகனத்தை விரட்டிச் சென்று மடக்கினார். ஸ்கூட்டியில் இருந்து இறங்கிய அவரின் கையில் அரிவாள் இருந்ததைக் கண்டு. மாநகராட்சி ஊழியர்கள் பயத்தில் அலறினர். அதிகாரி பிரபாகர் கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருள்களைப் பிரமிளா மீட்டுச் சென்றார்.

அதிகாரிகள்' தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம்' என்று தப்பி ஓடிவிட்டனர். பின்னர், ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, விரார் போலீஸ் நிலையத்தில் பிரமிளா மீது பிரபாகர் புகார் அளித்தார். பிரமிளாவை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  

Photo: MID DAY


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement