மோடியும் ட்ரம்ப்பும் ‘இப்படித்தான்’ பதவிக்கு வந்தார்கள்: அமெரிக்காவில் ராகுல் காந்தி!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்குள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றினார்.

ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் 15 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல இடங்களுக்கும் சென்று உரையாற்றி வரும் ராகுல் காந்தி, பிரின்ஸ்டனின் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அங்கு பேசிய ராகுல், “இன்றைய உலகின் முக்கியப் பிரச்னையாக இருப்பது வேலையில்லாத் திண்டாட்டம். இந்தியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக இணைகின்றனர். ஆனால், இந்திய அரசு ஒரு நாளைக்கு 500 பேருக்குத்தான் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் இந்த வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தைப் பயன்படுத்தித்தான் தலைவர்கள் பதவியில் உயர்ந்துள்ளனர். அமெரிக்காவின் ட்ரம்ப் குறித்து மட்டும் இல்லையென்றாலும், இந்தியாவில் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை அரசியலாக உருவாக்கித்தான் பிரதமர் மோடி பதவி ஏற்றுள்ளார். தேர்தலின்போது அவர் அளித்த வாக்குறிதியின் அடிப்படையில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!