Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும் - மத்திய அரசு

ரயில்வே ஊழியர்களுக்கு, '78 நாள்கள் ஊதியம் தீபாவளி போனஸாக வழங்கப்படும்' என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கணக்கீட்டின்படி 72 நாள்கள் ஊதியத்தை போனஸாக வழங்க வேண்டும், ஆனால், கடந்த சில ஆண்டுகளாக 78 நாள்கள் ஊதியம் போனஸாக வழங்கப்பட்டுவருகிறது. அந்த முறையைப் பின்பற்றி, நடப்பு ஆண்டிலும் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள்கள் போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். 

தசரா மற்றும் ஆயுதபூஜை விடுமுறை தினங்கள் வருவதால், தீபாவளி போனஸானது அதற்கு முன்னதாகவே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நாடு முழுவதும் உள்ள 12.30 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவர் என்றும், அரசுக்கு ரூ.2,245.45 கோடி செலவாகும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரு ஊழியருக்கு வழங்கப்படும் தொகை, ரூ.17,951 என்றும், இந்த போனஸ் ரயில்வே போலீஸாருக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement