’கஃபே காபி டே’ உரிமையாளர் அலுவலகங்களில் ஐ.டி சோதனை!

கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தாவுக்குச் சொந்தமான அலுவலகத்தில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த்தா, Café Coffee Day -யின் உரிமையாளர் ஆவார்.


சித்தார்த்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு, மும்பை, சென்னை, சிக்மகளூர் உள்ளிட்ட 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். 

 

s.m.krishna

 பா.ஜ.க மூத்த தலைவரான எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக முதல்வராகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவரின் மருமகனும் பிரபல தொழிலதிபருமான சித்தார்த்தா, வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, வருமான வரித்துறையினர், இன்று காலை அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திவருகின்றனர். இந்தியா முழுவதும் இயங்கிவரும் பிரபல ’கஃபே காபி டே’ விற்பனை நிலையங்களிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!