ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக்கிங்குக்கு கட்டுப்பாடு! ஏழு வங்கிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் ஏழு வங்கிகளைச் சேர்ந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைக் கொண்டு மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பண மதிப்பு நீக்கம் நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய அரசு பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக ஐ.ஆர்.சி.டி.சி மூலம் புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவைக் கட்டணமாகப் பிடிக்கப்படும் 20 ரூபாயை ரத்து செய்தது. மேலும், இந்த வருவாய் இழப்பை வங்கிகளுடன் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. இழப்புத் தொகை 20 ரூபாயில் ஐ.ஆர்.சி.டி.சி 10 ரூபாயையும் வங்கி நிர்வாகம் 10 ரூபாயையும் பகிர்ந்துகொள்வதற்கு ரயில்வே நிர்வாகம் முயற்சி செய்தது. ஆனால், சில வங்கிகள் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதையடுத்து ஏழு வங்கிகளின் கார்டுகளில் இருந்து மட்டும் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் டிக்கெட்டை புக் செய்ய முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியன் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி, யுனைடெட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்ட்ரல் வங்கிகளின் கார்டுகள் மூலம் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!