Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கட்சியைவிட நாடுதான் முக்கியம்!’ - மோடி நெகிழ்ச்சி

’எங்களுக்கு கட்சியைவிட நாடுதான் முக்கியம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

modi
 

மோடி, இரண்டு நாள் பயணமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள அவரின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றுள்ளார். அங்கு, புதிதாகப் பல நலத்திட்டங்களை நேற்று தொடங்கிவைத்துப் பேசிய மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை வெகுவாகப் பாராட்டினார்.

modi
 

இன்று, விவசாயிகள் கலந்துகொண்ட கூட்டத்தில்  உரையாற்றிய மோடி, ‘நாங்கள் வாக்கு வங்கிக்காகவோ, தேர்தல் வெற்றிக்காகவோ ஆட்சி நடத்தவில்லை. இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வதே எங்களின் முக்கிய  நோக்கம். கட்சியைவிட நாடுதான் முக்கியம்’  என்றும் பேசினார். அதன்பிறகு, ஷாஹான்ஷஹ்பூர் கிராம மக்களைச் சந்தித்துப் பேசினார். அந்தக் கிராமத்தில், 'தூய்மை இந்தியா' திட்டத்தின்கீழ் நலத் திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement