பஞ்சாப்: தாயுடன் சேர்ந்து மூத்த பத்திரிகையாளர் படுகொலை!

பஞ்சாப்பில், மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங் மற்றும் அவரது தாய் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

கே.ஜே.சிங்


பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் கே.ஜே.சிங். அவருக்கு வயது 65. இந்நிலையில், சிங் மற்றும் அவரது தயாரின்  உடல்கள், மொஹாலியில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து கண்டறியப்பட்டது. இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இருவரும் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நேற்று மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளதாக, விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், வீட்டில் இருந்த டி.வி உள்ளிட்ட பொருள்கள் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே, கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் என்ற மூத்த பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், தற்போது மற்றொரு பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். முக்கியமாக, இந்த மாதம் மட்டும் மூன்று பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு, பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!