Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘நாங்கள் மருத்துவர்களை உருவாக்குகிறோம், பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்குகிறது’, ஐ.நா வில் சுஷ்மா கடும் தாக்கு!

”இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த பிறகு, இந்தியா பொறியாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கியது. ஆனால் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தான் உருவாக்கியது” என இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பேசினார். 

ஐ.நா வின் 72 வது பொதுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தார். கடந்த சில நாள்களாக எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருவதற்கு சுஷ்மா ஐ.நாவில் பதிலடி அளித்தார். 

இந்த கூட்டதில் பேசிய சுஷ்மா, “இந்தியாவும் பாகிஸ்தானும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றது. இந்தியா ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை உருவாக்கியது. ஆனால் நீங்கள்(பாகிஸ்தான்) தீவிரவாத இயக்கங்களை  உருவாக்கினீர்கள். நாங்கள் மருத்துவர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்கும் போது நீங்கள் தீவிரவாதிகளையும், ஜிகாதிகளையும் உருவாக்கினீர்கள். மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவார்கள். ஜிகாதிகள் கொலை செய்வார்கள். 

sushma

இந்திய அரசாங்கம் நாடு வளர்ச்சி பாதையில் செல்ல பல துணிச்சலான முடிவுகளை எடுத்தது. நாங்கள் வறுமையை எதிர்த்து போராடுகிறோம். ஆனால் எங்கள் அண்டை தேசமான பாகிஸ்தான் எங்களோடு போரிடுவதில் மட்டும் தான் கவனம் செலுத்துகிறது” என்றார். 

பாகிஸ்தான் பிரதமர், இந்தியா, காஷ்மீர் பகுதிகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். அதற்கு சுஷ்மா இன்று தக்க பதிலடி கொடுத்துள்ளார். சுஷ்மாவின் இந்த பேச்சுக்கு இந்திய பிரதமர் மோடி தனது பாராட்டினை தெரிவித்துள்ளார். 
தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.நா.வில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் குறித்து தனது கருத்தை சுஷ்மா சுவராஜ் வலிமையாக பதிவு செய்துள்ளார். சுஷ்மா உரையால் இந்தியா உலக அரங்கில் பெருமை பெற்றுள்ளது” என தனது பாராட்டினை பதிவு செய்தார். 
 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement