பிறந்த ஆறே நிமிடங்களில் குழந்தைக்கு ஆதார் அடையாள அட்டை!

மகாராஷ்டிரா மாநிலம், ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் இன்று பிறந்த பெண் குழந்தைக்கு ஆறே நிமிடங்களில் ஆதார் அட்டை கிடைத்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

aadhaar

மகாராஷ்டிரா மாநிலம், ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள மகளிர் மருத்துவமனையில் இன்று ஒரு பெண்ணுக்கு பகல் 12.03 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு பாவனா சந்தோஷ் ஜாதவ் எனப் பெற்றோர் பெயரிட்டனர். பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டைக்காக குழந்தையின் தந்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். சரியாக பிற்பகல் 12.09 மணிக்கு, விண்ணப்பித்த ஆறாவது நிமிடத்தில், பாவனா சந்தோஷ் ஜாதவ் பெயரில் இந்திய குடிமகள் என்பதற்கு ஆதாரமான ஆதார் அட்டையும், பிறப்புச் சான்றிதழும் ஆன்லைன் மூலமாக கைக்கு வந்தது. 

பிறந்த ஆறாவது நிமிடத்திலேயே குழந்தைக்கு ஆதார் அட்டை கிடைத்த சம்பவம் ஒஸ்மானாபாத் மாவட்டத்துக்கு கிடைத்த பெருமை என அம்மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணா காமே குறிப்பிட்டார். மேலும், கடந்த ஓராண்டு காலமாக இம்மாவட்ட மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த சுமார் 1300 குழந்தைகளுக்கு உடனடியாக ஆதார் அட்டை அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!