மகள்களுக்கு ஐபோன் வாங்க சிங்கப்பூர் பறந்த தொழிலதிபர்!

தனது மகளுக்கு ஐபோன் பரிசளிப்பதற்காக, இந்திய தொழிலதிபர் ஒருவர் சிங்கப்பூருக்கு பறந்துள்ளார்.

ஐபோன்

 

ஐபோன் புதிய வரவுகள் கடந்த வாரம் வெளியானது. வெளியான முதலே விற்பனையில் சக்கைபோடு போட்டுவரும் ஐபோனின் புதுவரவுகள் இந்தியாவுக்கு இன்னும் வரவில்லை. இதனிடையே, அமின் அகமது தியோலியா என்ற 43 வயது தொழிலதிபர், தனது மகளுக்கு ஐபோன் வாங்குவதற்காக, 13 மணி நேரம் விமானத்தில் பயணம் செய்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

குறிப்பாக, அங்கு வரிசையில் முதல் ஆளாக நின்று ஐபோன் 8 பிளஸ் போனை அவர் வாங்கியுள்ளார். தனது மகளுக்கு திருமண பரிசாக இதைக் கொடுப்பதற்காக, அவர் சிங்கப்பூருக்கு சென்று வந்துள்ளார். இதற்காக, இரவு முழுவதும் வரிசையில் நின்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமின் அகமது தியோலியா கூறுகையில், "நான் மொத்தம் இரண்டு ஐபோன்களை வாங்கினேன். என்னுடைய இன்னொரு மகளுக்கும் ஐபோன் வாங்கியுள்ளேன். இரவு முழுவதும் வரிசையில் நின்றது இதுவே முதல்முறை. ஆனால், தற்போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். 

அமின் அகமது தியோலியாவுடன் சேர்த்து, மேலும் பல வெளிநாட்டுக்காரர்கள் வரிசையில் நின்றுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!