Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஜார்க்கண்ட் பட்டாசு ஆலையில் தீ விபத்து - 8 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலத்தில், பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

பட்டாசு ஆலை விபத்து

ஜார்க்கண்ட் மாநிலம், குமர்துபி என்ற பகுதியில் ஒரு பட்டாசு ஆலை இயங்கிவந்தது. இன்று காலை, அந்த பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென வேகமாகப் பரவியது. இந்த விபத்தில், தற்போதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு 5 தீயணைப்பு வண்டிகள் விரைந்துவந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீஸாரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனிடையே அந்தப் பட்டாசு ஆலை,  சட்டத்துக்குப் புறம்பான வகையில் இயங்கிவந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் தீ விபத்தால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, மேற்குவங்கத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement