Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மாணவிகளை அடித்த போலீஸ்: வைரலாகும் வீடியோ

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்

Chennai: 

த்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த வியாழக்கிழமை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

அன்று நடந்த சம்பவத்தின்போது அருகில் இருந்த பாதுகாவலர்களிடம் உதவி கேட்டும், அவர்கள் உதவிக்கு வரவில்லை என்றும், இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் புகார் அளித்ததற்கு, ’மாலை 6:30 மணிக்கு அந்தப் பெண் அங்கு சென்றது தவறு’ என்று பல்கலைகழகத்தின் சார்பில் பதிலளித்துள்ளனர். இதனால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் செல்ல இருந்த பிரதமர் மோடி அந்த வழியே செல்ல இருந்ததால் பதற்றம் அதிகரித்தது. 

இதையடுத்து சனிக்கிழமை இரவு, அமைதியாகப் போராடிய மாணவிகளை தடியடி நடத்தி காவல்துறையினர் கலைத்தனர். காவல்துறையினர் மாணவிகளை மோசமாக தாக்கும் காணொலிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. மாணவிகள் காவல்துறையினரை தாக்கியதாகவும், அதற்குப் பதில் தாக்குதலைத்தான் காவல்துறை நடத்தியதாகவும் காவல்துறையினர் சார்பில் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க  அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதில் 1200 மாணவ-மாணவிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பல கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement